search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வளர்ப்பு நாய் கமாண்டர்
    X
    வளர்ப்பு நாய் கமாண்டர்

    ஜோ பைடன் வெள்ளை மாளிகையின் புதிய வரவு கமாண்டர்

    வளர்ப்பு நாய் சாம்ப் மறைவு குறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், 13 ஆண்டு காலம் எங்கள் குடும்பத்தின் உற்ற நண்பனாக விளங்கினான் என்றார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணிகளுடன் கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.

    அதிபர் ஜோ பைடன் 2008-ம் ஆண்டு ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், 2018-ம் ஆண்டு அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இதற்கிடையே, அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய்களில் ஒன்றான சாம்ப் கடந்த ஜூன் மாதம் இறந்தது. 

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு புதிய வரவாக கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வந்துள்ளது.

    அதிபர் ஜோ பைடனுக்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் பைடன், மருமகள் சாரா பைடன் ஆகியோர் கமாண்டர் நாயை பரிசளித்துள்ளனர். பிறந்து மூன்றரை மாதமான கமாண்டர், வெள்ளை மாளிகைக்கு வந்ததை ஜோ பைடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×