என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
Byமாலை மலர்28 Feb 2021 3:10 AM GMT (Updated: 28 Feb 2021 3:10 AM GMT)
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தையும் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ஜான்சென் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பும் பணி நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சுமார் 4 மில்லியன் டோஸ் மருந்துகள் வர உள்ளன. மார்ச் இறுதிக்குள் 20 மில்லியன் டோஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தடுப்பூசி மருந்துகளை இரண்டு முறை செலுத்த வேண்டும். ஆனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்தை ஒரு முறை செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×