search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா-பாகிஸ்தான்
    X
    சீனா-பாகிஸ்தான்

    சீனா-பாகிஸ்தான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம்

    சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல் போக்கு உச்சத்தில் உள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் தங்கள் ராணுவ உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    இஸ்லாமாபாத்:

    சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட ஜெனரல் வே, பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்து பேசினார்.

    அப்போது இருவரும் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இது குறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மற்றும் ராணுவங்களுக்கு இடையேயிலான உறவுகள் தொழில் நுட்பம், உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    பாகிஸ்தான் ராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணம் அமைந்தது. சர்வதேச மற்றும் பிராந்திய சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இரு நாட்டு ராணுவ ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்பட வில்லை. சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இது தொடர்பாக ஜெனரல் வே கூறும் போது, சீனா, பாகிஸ்தான் ராணுவங்கள் கூட்டாக இணைந்து அபாயங்கள், சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கும் இருந்த வரும் நிலையில் சீனா-பாகிஸ்தான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×