search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்துக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும்  இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி  உலக தலைவர்கள் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

    அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார். 

    இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தீபத் திருநாளின்போது நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், அன்பிற்குரியவர்கள் இணைந்து தீமைக்கு பதிலாக நன்மையையும், இருளுக்கு பதிலாக வெளிச்சத்தையும், அறியாமைக்கு பதிலாக அறிவையும் கொண்டாடுகின்றனர்.

    தீபாவளியை கொண்டாட விளக்கு ஏற்றும் அனைத்து இடங்களிலும் மத சுதந்திரத்தில் நம் நாடு மிளிர்வதை காணலாம். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தீபாவளி கொண்டாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×