search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பிடன்
    X
    ஜோ பிடன்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு முதல் வெற்றி

    டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற சிறிய நகரத்தில் மொத்தம் உள்ள 5 வாக்குகளையும் ஜோ பிடன் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இது தேர்தல் நாளில் வெளியான முதல் அறிவிப்பாகும்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய நிகழ்வாகும்... அது என்னவென்றால், அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் என்றொரு பகுதி உள்ளது. அதில் டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற நகரும் மில்ஸ்பீல்டு என்ற நகரும் உள்ளன. அதில், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரில்தான் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அனைத்து வாக்குகளையும் அவர் சுருட்டிக்கொண்டுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை...

    இதில் வேடிக்கை என்னவென்றால், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரின் மொத்த மக்கள்தொகையே 12 தான் (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி).

    அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

    அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டு, அதன் மக்கள் தொகை 21. அந்த 21 பேரில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
    Next Story
    ×