search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில்
    X
    பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில்

    பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடக்கம்

    பாகிஸ்தானில் முதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
    லாகூர்:

    போக்குவரத்து கட்டமைப்புகள் மிகவும் குறைவான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்நாட்டில் சாலை வழி போக்குவரத்தே பிரதானமான போக்குவரத்து சேவையாக உள்ளது. 

    இதற்கிடையில், பாகிஸ்தானில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க அந்நாடு திட்டமிட்டது. இதற்காக சீனாவிடம் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் கடன் தொகை பெறப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் 27 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த ரெயில் பாதை அமைப்பதில் ஓராண்டு கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டதையடுத்து, ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த பணிகளை சீனாவின் அரசு நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

    இந்நிலையில், மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது தான் பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில் சேவை ஆகும்.

    முதல் முறையாக இன்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையில் பாகிஸ்தான் மக்கள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.    
    Next Story
    ×