search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் உயர்வு

    பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது.
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸில் 24 மணி நேரத்தில் 1,695 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது, இது மே 30-ம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் ஆகும்.

    மே 30 ஆம் தேதி அன்று பிரான்சில் சுமார் 1,828 கொரோனா பாதிப்புகள் பதிவானது. எனினும், மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளதாக சுகாதார அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 30,305 ஆக உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இங்கிலாந்து மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக 3 வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.

    Next Story
    ×