search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆண்டனியோ குடரஸ்
    X
    உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆண்டனியோ குடரஸ்

    கொரோனா ஊரடங்கால் 160 கோடி மாணவர்கள் பாதிப்பு

    கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆண்டனியோ குடரஸ் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆண்டனியோ குடரஸ், கொரோனாவும், கல்வியும் குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 கோடியே 38 லட்சம் குழந்தைகளும், உயர்வகுப்பு படிக்கும் மாணவர்களும் அடுத்த ஆண்டு படிப்பை கைவிட நேரிடலாம். இந்த ஆண்டு மழலையர் வகுப்புகளில் சேர வேண்டிய 4 கோடி குழந்தைகள், கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

    கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், கல்வி ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×