search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா கொடி
    X
    இந்தியா கொடி

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்கும்

    இந்தியா அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் 2 ஆண்டு உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்குகிறது.
    நியூயார்க் :

    ஐ.நாவின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

    இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். ஆங்கில அகர வரிசையில் தலைவர் தேர்வு நடைபெறும் நிலையில் இந்தியா அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் 2022-ம் ஆண்டிலும் ஒரு மாதம் தலைவராக பணியாற்றும் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் 2 ஆண்டு உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்குகிறது. ஆசியா-பசிபிக் பிரிவு சார்பில் இந்தியா இந்த பதவியை பெற்றுள்ளது.
    Next Story
    ×