என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டனில் கொரோனாவால் தெற்காசிய மக்கள் அதிகம் உயிரிழக்க வாய்ப்பு- ஆய்வில் தகவல்
Byமாலை மலர்20 Jun 2020 3:34 AM GMT (Updated: 20 Jun 2020 3:34 AM GMT)
கொரோனா பாதிப்பால் பிரிட்டன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
லண்டன்:
பிரிட்டனில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.
எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் நடந்த ஆய்வு ஒன்றில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் மற்றும் 260 மருத்துவமனைகள் பங்கு பெற்றன.
இந்த ஆய்வில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு 1,000 வெள்ளையின மக்களில் 290 பேர் இறக்கின்றனர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர் என தெரியவந்திருக்கிறது. வெள்ளை இனத்தவரோடு ஒப்பிடும்போது, மருத்துவமனையில் உள்ள தெற்காசிய இனத்தவரின் மரண வீதமும் தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களில் அனுமதிக்கபட்ட நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர். தடுப்பூசி போடுவதில் யார் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீர்மானிக்கும் போது இனத்தையும் இப்போது வயதையும் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவன் ஹாரிசன் கூறுகையில், ‘தெற்காசிய இனத்தவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது. இதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது.
எனவே தெற்காசிய மக்கள் அதாவது சிறுபான்மையின மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் கொரோனா வைரசிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல் மிகமிக அவசியம்’ என்றார்.

Next Story
×