search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில் மருத்துவர்கள்
    X
    கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில் மருத்துவர்கள்

    கொரோனா தடுப்பு பணியில் துபாயில் துடிப்புடன் பணிபுரியும் தமிழக டாக்டர் தம்பதி

    கொரோனா தடுப்பு பணியில் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் மற்றும் அவரின் மனைவி துபாயில் துடிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் தினமும் 600-க்கும் மேற்பட்டோர் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘கொரோனா’ பாதிப்புக்கு உள்ளாகினர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் ‘கொரோனா’ நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. எனவே இந்த பணியில் தன்னார்வத்துடன் உதவிடுமாறு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு இந்திய தூதரகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    கொரோனா வைரஸ் தடுப்புப்பணி


    இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சென்னையை சேர்ந்த பிரபல லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் பிற இந்திய டாக்டர்களுடன் அமீரகத்தில் ‘கொரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் துடிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.இதில் டாக்டர் ராஜ்குமார் சென்னையில் உள்ள லைப்லைன் மினிமல் அக்சஸ் நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த பணியில் தன்னார்வத்துடன் இணைந்துள்ளேன். துபாய் நகரின் வெளிப்புற பகுதி ஒன்றில் 500-க்கும் மேற்பட்ட ‘கொரோனா’ நோயாளிகளுக்கு மத்தியில் தற்போது பணியாற்றி வருகிறேன்.

    ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 12 மணி நேர மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனது மனைவியும் டாக்டர் என்பதால் அவரும் இந்த பணிகளுக்கு சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறார். நாங்கள் அனைவரும் பணியில் ஈடுபடும் போது முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகிறோம். இந்திய டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பான முறையில் தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் சர்வதேச அளவில் ‘கொரோனா’ தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களில் 700 முதல் 800 பேர் வரை இறந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×