search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கொரியா அதிபர் மூன் ஜெ இன்
    X
    தென்கொரியா அதிபர் மூன் ஜெ இன்

    தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை

    கொரோனா தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. புதிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது என்று தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் எச்சரித்துள்ளார்.

    சியோல்:

    தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 256 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் தென்கொரியாவில் கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. 

    இந்த நிலையில் அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-

    நாட்டில் தீவிர கொரோனா தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. புதிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தின் வேகத்தை கொஞ்சமும் குறைத்து விடக்கூடாது.

    கொரோனாவுக்கு எதிரான நீண்டகால போரை நாம் மேற்கொண்டு உள்ளோம். இயல்புநிலை திரும்பும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×