என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் சிகிச்சையில் தென்கொரிய நர்ஸ்கள்
  X
  கொரோனா வைரஸ் சிகிச்சையில் தென்கொரிய நர்ஸ்கள்

  உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா இல்லை- தென்கொரியா, புதிதாக யாருக்கும் இல்லை- வியட்நாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மிகவும் சிறப்பாக மேற்கொண்ட தென்கொரியா, புதிதாக ஒருவருக்கும் தொற்று இல்லை என அறிவித்துள்ளது.
  கொரோனா வைரஸ் தொற்று சீனாவுக்கு வெளியே வேகமாக பரவிய நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. ஆனால் அதிவேக பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தொற்று உறுதிப்படுத்தியவர்களுடன் தொடர்புடையவர்களை தடம் அறிதல் ஆகியவற்றை மிகவும் சிறப்பாக செய்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

  பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தென்கொரியாவில் கொரோனா தடம் பதித்தது. நேற்று வரை 10 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உள்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அந்த நான்கு பேரும் அமெரிக்கா, சீனா, ஆசிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என தென்கொரியாக கூறியுள்ளது.

  கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி மற்ற நாடுகளுக்கு உதாரணமாக தென்கொரியாக விளங்குகிறது. கொரோனா நெருக்கடிக்கு இடையில் ஏப்ரல் 15-ந்தேதி வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.

  வியட்நாம் பயணத்தடை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் 270 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை எனத் தெரிவித்துள்ளது. ஹாங்காங் கடந்த ஐந்து நாட்களாக யாருக்கும் கொரோனா இல்லை என அறிவித்துள்ளது.
  Next Story
  ×