என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  நேபாளத்துக்கு 23 டன் மருந்துகள் - மோடிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஒலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா சிகிச்சைக்காக 23 டன் மருந்துகள் அனுப்பியதற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
  கோலாலம்பூர்:

  சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது.
   
  பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு  உள்ளது. 

  இதற்கிடையே, நேபாளத்தில் கொரோனா வைரசால் 45 பேர் மட்டுமே பாதிப்பு அடைந்துள்ளனர்.

  இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக 23 டன் மருந்துகள் அனுப்பியதற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா சிகிச்சைக்காக 23 டன் மருந்துகள் அனுப்பிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த மருந்துகள் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×