search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை
    X
    ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்லாத நாடுகள் மீது நடவடிக்கை- ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தாயகம் திரும்ப அனுமதிக்க மறுக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்தது.
    ரியாத்:

    கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதில் சில நாடுகள், சிறப்பு விமானங்கள் மூலம் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வந்தன. பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை அழைத்து வரவில்லை.

    இந்நிலையில், தங்கள் நாட்டு தொழிலாளர்களை அழைத்துச் செல்ல மறுக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது. ஊரடங்கால் வேலை இழந்து தவிப்பவர்கள், விடுப்பில் உள்ளவர்கள் என புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பல்வேறு நாடுகள் அழைத்துச் செல்ல மறுப்பதாகவும், தாயகம் திரும்ப அனுமதிக்காவிட்டால் அந்த நாடுகளுடனான தொழிலாளர் உறவுகளை மறுபரிசீலனை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளது.  மேலும் அந்த நாடுகளுக்கான பணி விசாக்கள் ஒதுக்கீட்டில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறி உள்ளது.

    இந்தியாவில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்போது, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருக்கும் இந்திய தொழிலாளர்களை பெருமளவில் அழைத்து வர முடியவில்லை என்று இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உதவி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×