search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக வங்கி
    X
    உலக வங்கி

    கொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி

    கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி அவசரகால நிதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
    ஜெனீவா:

    உலக நாடுகளை தனது கோரப்பிடியில் நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி 24 ஆம் தேதி ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தினார். கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வு மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×