search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    நியூயார்க்:

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 199 நாடுகளை இந்த வைரஸ் தொற்று தாக்கி உள்ளது. சுமார் 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வல்லரசு நாடான அமெரிக்கா தான் தற்போது கொரோனா வைரசால் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு 1 லட்சத்து 23 ஆயிரம் பேரை மேற்பட்டோரை தாக்கியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதி உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு ரூ 21.71 கோடி நிதி அளிக்கப்படுகிறது.

    அமெரிக்கா ஏற்கனவே கடந்த மாதம் ரூ 748 கோடி நிதி உதவியை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×