search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரிப்படம்
    X
    மாதிரிப்படம்

    சவுதி அரேபியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

    சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவ 200 ராணுவ வீரர்களையும் சில பேட்ரியாட் ஏவுகணைகளையும் அந்நாட்டிற்கு தர உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்: 

    சவுதி அரேபியாவில் உள்ள இரு முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் சமீபத்தில் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஈரான் நாடுதான் காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்த  குற்றச்சாட்டை ஈரான்  மறுத்தது. 

    இந்நிலையில், சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் 200 ராணுவ வீரர்களையும், பேட்ரியாட் ஏவுகணைகளையும்  அந்நாட்டிற்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது என அமெரிக்க ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இந்த ராணுவப்படைகள் சவுதி அரேபிய அரசின் வான்வழி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் பலம் தரும். அரசின் முடிவை பொருத்து தாட் எனப்படும் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பு கருவிகளும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

    எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ? நிரூபிக்க இயலுமா? என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அமெரிக்காவிற்கு இன்று சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×