search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் பரவும் டெங்கு காய்ச்சல்
    X
    பாகிஸ்தானில் பரவும் டெங்கு காய்ச்சல்

    பாகிஸ்தானில் 9 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

    பாகிஸ்தானில் இந்தாண்டில் சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தெற்கு சிந்து மாகாணத்தில் 2 ஆயிரத்து 132 பேரும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 2 ஆயிரத்து 816 பேர்ரும், பலூசிஸ்தானில் ஆயிரத்து 772 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஆயிரத்து 612 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரத்து 210 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

    மேலும், இதுவரை, பாகிஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    மேலும், சிந்து மாகாணத்தில் 8 பேரும், இஸ்லாமாபாத், பலூசிஸ்தானில் தலா 3 பேர், பஞ்சாப்பில் 2 பேர் என மொத்தம் 16  பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×