search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷ்யா வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி ரியாப்கோவ்
    X
    ரஷ்யா வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி ரியாப்கோவ்

    அமெரிக்கா ராணுவ பதற்றங்களை அதிகரிக்கிறது: ரஷ்யா

    அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    மாஸ்கோ:

    அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

    நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது.

    கடந்த ஆகஸ்ட் 3 தேதி அமெரிக்கா ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியதால் ஒப்பந்தம் ரத்தானதாக ரஷ்யா அறிவித்தது. 

    இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் நிக்கோலாஸ் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது நடுத்தர தொலைவு ரக ஏவுகணை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து  ரஷ்யா வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், “அமெரிக்கா  ஏவுகணை சோதனைகளை செயல்படுத்துவது வருத்ததிற்குரிய செயலாகும். இதன் மூலம் அமெரிக்கா ராணுவ பதற்றங்களை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. ஆனால் நாங்கள் இம்மாதிரியான ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலடி எதுவும் கொடுக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×