search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கொடி
    X
    பாகிஸ்தான் கொடி

    இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

    இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.மேலும் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் இந்த முடிவால் அந்த நாடு காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து வருகிறது.

    இதற்காக சீனாவுடன் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை கொண்டு வந்தது. இந்த முயற்சிக்கு போதுமான ஆதரவு கிடைக்க வில்லை. பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்தநிலையில் இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷாமுகமது குரைசி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

     

     காஷ்மீருக்கு 370 மற்றும் 35ஏ

    இந்த கூட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளரும், மேஜர் ஜெனரலுமான ஆசிப்கபூர் கூறியதாவது:-

    காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் நாங்கள் இந்தியாவின் தாக்குதலை சந்திக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்.

    இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் உள்ளோம். எல்லையில் போதுமான அளவுக்கு படைகளை நிறுத்தியுள்ளோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வோம்.காஷ்மீர் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குரைசி கூறியதாவது:-

    பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் சிறப்பு காஷ்மீர் செல் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் பிரச்சினை குறித்து உலக அளவில் கொண்டு செல்வது பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

    காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கோர்ட்டுக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×