search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி
    X
    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி

    காஷ்மீர் விவகாரத்தில் நம்மை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்: பாகிஸ்தான் மந்திரி புலம்பல்

    காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் தடைபட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளின் உதவியை நாட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் தெரிவித்துருந்தார்.  

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    உலக நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நமக்கு மிகவும் நெருக்கமான நட்பு உள்ள நாடுகள் உள்பட அனைவரும் அங்கு முதலீடுகள் செய்துள்ளன. அவர்கள் அனைவருக்கும் தங்களது சொந்த ஆதாயமே முக்கியமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் கையில் மாலைகளுடன் நமக்காக யாரும் காத்திருக்க மாட்டார்கள். ஆகையால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அனைவரும் "முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழவேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×