search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷா முகமது குரேஷி"

    ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் எனும் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பபட வேண்டும் எனில் பிராந்திய ஒத்துழைப்பிற்கு சமூக அமைதியும், பாதுகாப்பும் இன்றியமையாதது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு சமூகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார்.

    ஆனால், அவரது பேச்சு நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் உரையை கேட்காமல் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறி ப்ரிக்ஸ் அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டார்.

    சுஷ்மாவின் செயலை மறைமுகமாக கண்டித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, பிராந்திய ஒத்துழைப்பிற்கு எதிராக இந்தியா தடைகளை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கூட்டத்தின் பாதியிலேயே அவர் (சுஷ்மா) வெளியேறியதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி அவர் இந்த கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு தடை    ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும் ?.

    சார்க் அமைப்பின் செயல்திட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றிகளை பற்றி பேச நான் தயங்கவில்லை. ஆனால், பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரேஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    ×