என் மலர்

  செய்திகள்

  கோப்புப் படம்
  X
  கோப்புப் படம்

  பாகிஸ்தான் தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
  கைபர் பக்துன்வா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அமர்ந்திருத்த பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. 

  தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த 40-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் போலீசார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது பெண் என தெரியவந்துள்ளது. இத்தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இப்பிராந்தியத்தில் பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  Next Story
  ×