search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் விமான விபத்து - 9 பேர் உயிரிழப்பு
    X

    அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் விமான விபத்து - 9 பேர் உயிரிழப்பு

    மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
    நியூயார்க்:

    மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. தீயை கக்கும் எரிமலைகள் மற்றும் ஏராளமான தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஹவாய் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாக ஓவாஹு  விளங்கி வருகிறது.

    ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான இரட்டை என்ஜின் விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலானது.



    இந்த விபத்தில் 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் ‘ஸ்கை டைவிங்’ சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் சென்றதாக தெரிகிறது.

    Next Story
    ×