search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகள் எண்ணிக்கை 471
    X

    பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகள் எண்ணிக்கை 471

    பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை அந்நாட்டு அரசு இந்திய உயர் தூதரிடம் இன்று ஒப்படைத்தது. #Indianprisoners #Pakistan
    இஸ்லாமாபாத்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் கடற்படையிடம் சிக்குபவர்கள் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதையடுத்து 2008-ம் ஆண்டு மே 21-ம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களையும், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்த விவரங்களையும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில், இன்று பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 418 மீனவர்கள் உட்பட 471 கைதிகள் குறித்த பட்டியலை இந்திய உயர் தூதரிடம் பாகிஸ்தான் அரசு சமர்ப்பித்தது. விரைவில் இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்த பட்டியலும் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Indianprisoners #Pakistan
    Next Story
    ×