என் மலர்

  செய்திகள்

  மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு வீடு திரும்பினார்
  X

  மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு வீடு திரும்பினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து வீடு திரும்பினார்.
  டெல் அவிவ்:

  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவியை தவறாக பயன்படுத்தி பண ஆதாயம் அடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் இரண்டு நிரூபணமாகியுள்ளன. மேலும், ஒரு குற்றச்சாட்டின்கீழ் நேதன்யாகு, அவரது மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  இந்நிலையில், தொடர் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

  மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு இன்று வீடு திரும்பினார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுவாசப்பையின் மேல் பகுதியில் வைரஸ் தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

  இன்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நேதன்யாகு தலைமையில் மந்திரிசபை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. உடல்நலக்குறைவால் இதில் பிரதமர் கலந்துகொள்ள இயலாமல் போனால், பாதுகாப்புத்துறை மந்திரி அவிக்டர் லிய்பெர்மேன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
  Next Story
  ×