search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெஞ்சமின் நேதன்யாகு"

    • இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படுகிறது.
    • அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரமாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.

    ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களைக் கட்டமைக்க உள்ளது என இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.

    இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும், குடிமக்களின் நன்மைக்காகவும் என தெரிவித்துள்ளது.

    ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின்மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில் ராணுவ வீரர்கள், ஈரான் ஆதரவு பெற்ற துணைராணுவப் படையினர் தங்கி உள்ளனர். இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதனால் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியது.
    • ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:

    ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். நாம் ஒரு தெளிவான கோட்பாட்டை வைத்துள்ளோம். யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கு செய்வோம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக்கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம். இஸ்ரேல் குடிமக்களே, நீங்களும் சம நிலையில் உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.

    ராணுவத்தின் கட்டளையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால், நம் எதிரிகள் அனைவரையும் வெல்வோம். இஸ்ரேலை ஆதரிப்பதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறேன் என்றார்.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • எதற்கும் தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
    • இஸ்ரேலுக்கு உதவும் வகையில் கூடுதல் படைகளை அங்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.
    • இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது.
    • பிரதமர் பதவி விலகக் கோரி இஸ்ரேலில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தைக் கடந்துள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல் அவிவ் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் நேதன்யாகு பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • விவரங்கள் அந்நாட்டு மந்திரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
    • இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

    ஹமாஸ் உடனான போர் நிறைவுற்ற பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதே விவரங்கள் அந்நாட்டு மந்திரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையில் போருக்கு பிறகு, காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேல் பங்கு குறித்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி போர் நிறைவுற்று, ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில், காசா முழுக்க இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும். காசாவிற்குள் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவப்படும். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடம் நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காசா நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுவரை 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
    • ஹமாசிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர எதுவும் வரவில்லை என்றார் நேதன்யாகு

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    இடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை தொடர்ந்தது.

    இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்கவும், மீண்டும் போர்நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் நிரந்தர போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது.

    மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது.

    பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது.

    பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

    முன்நிபந்தனைகள் இல்லாமல் இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு பயனுள்ள ஏற்பாட்டை செய்ய முடியும்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • இப்போரினால் காசா பகுதியில் சுமார் 25,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
    • அமெரிக்காவிடம் தனது நிலைப்பாட்டை கூறி விட்டதாக நேதன்யாகு தெரிவித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் 100 நாட்களை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவ படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.

    சில தினங்களுக்கு முன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்து சிக்கலை தீர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

    நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஹமாஸ் அழிய வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணய கைதிகள் மீண்டும் ஓப்படைக்க பட வேண்டும்.

    எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும். போர் இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம்.

    ஜோர்டான் நதிக்கு (River Jordan) மேற்கே உள்ள நில பகுதி முழுவதிலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பாலஸ்தீனத்தையும் சேர்த்தே குறிக்கும்.

    இஸ்ரேலின் எதிர்காலம் என்பது தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானதுதான்.

    இந்த உண்மையை அமெரிக்க நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் என கூறி விட்டேன்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    பணய கைதிகளை மீட்டு தனது நாட்டிற்கு கொண்டு வருவதற்குத்தான் நேதன்யாகு முன்னுரிமை தர வேண்டுமே தவிர, ஹமாஸை அழிப்பதில் காலம் கடத்த கூடாது என இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளது.
    • எங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெலிவிஷனில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்களை யாரும் தடுக்கமாட்டார்கள். வெற்றி பெறும் வரை போர் தொடரும். காசாவில் நடத்திய ராணுவ தாக்குதலில், பெரும்பாலான ஹமாஸ் படையினரை அகற்றிவிட்டோம். ஒரு சர்வதேச சட்டம் உள்ளது. அது ஒரு எளிய விஷயத்தைச் சொல்கிறது.

    வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பமுடியாது. எகிப்து- காசா எல்லையின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இது காசாவிற்கு ஒரு முக்கிய விநியோக பாதையாக உள்ளது. இந்தப் பாதையை மூடும் வரை நாங்கள் போரை நிறுத்தமாட்டோம் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
    • அப்போது, இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்தும் பேசினோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதில் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன் என தெரிவித்துள்ளார்.

    • பாலஸ்தீனத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் போரினால் உயிரிழந்துள்ளனர்
    • எங்கள் போர் மிக நியாயமானதுதான் என நேதன்யாகு அறிவித்துள்ளார்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீன காசா முனை பகுதி மீது இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது 60 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுவரை 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 48,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. சபையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, தனது "வீடோ" எனும் சிறப்பு அதிகாரத்தை (Veto) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

    இப்பின்னணியில் தங்களின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "அமெரிக்கா எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஹமாஸ் அமைப்பை ஒழிக்க நாங்கள் நடத்தி வரும் போர் மிக நியாயமானதுதான். அது மேலும் தொடரும்" என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் (Eli Cohen), "மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர், போர் இடைநிறுத்தம் ஏற்பட்டால் மீண்டும் காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்" என கூறினார்.

    இஸ்ரேலின் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) தங்கள் தாக்குதலில் இன்னமும் அழுத்தம் காட்டப்படும் என எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், காசாவில் 36 சதவீத வீடுகளில் உணவு பற்றாக்குறை நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் காசா முனை பகுதியில் பாதுகாப்பான இடம் என ஏதுமில்லை என்றும் காசா பகுதியின் சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய பெண்களை கற்பழித்தது குறித்துப் பேசத்தவறியதை பிரதமர் நேதன்யாகு கண்டித்தார்.
    • அனைத்து தலைவர்களும் இந்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியப் பெண்களை பலாத்காரம் செய்தபோதும், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் பெண்கள் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளான நீங்கள் எங்கு சென்றீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    மேலும், அனைத்து நாட்டு தலைவர்களும், அரசும் இந்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×