என் மலர்

  செய்திகள்

  நான் லஷ்கர் இ தொய்பாவின் தீவிர ஆதரவாளர் - பாக். முன்னாள் அதிபர் முஷரப் பேட்டி
  X

  நான் லஷ்கர் இ தொய்பாவின் தீவிர ஆதரவாளர் - பாக். முன்னாள் அதிபர் முஷரப் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லையோரத்தில் இந்திய படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாத ஆதரவாளர் நான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்.
  துபாய்:

  மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்டு 166 பேரின் இறப்புக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவனும், அமெரிக்க அரசால் தேடப்படும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டவனுமான ஹபிஸ் சயீத் வீட்டுச் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டான்.

  இந்நிலையில், துபாய் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.  ஹபிஸ் சயீத் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முஷரப் நான் லஷ்கர் இ தொய்பாவின் தீவிர ஆதரவாளர் என்று தெரிவித்துள்ளார்.

  லஷ்கர் இ தொய்பா என்பது ஆற்றல் வாய்ந்த பெரிய அமைப்பு. அமெரிக்காவுடன் கைகோர்த்து கொண்ட இந்தியா லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினரை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை விதிக்க வைத்தது.

  காஷ்மீர் விவகாரத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினரின் தலையீடு உள்ளது. அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனை. ஜம்மு-காஷ்மீரில் இந்திய படைகளுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பையும், அதன் கிளை அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்பையும், அதன் தலைவர் ஹபிஸ் சயீதையும் நான் பலமாக ஆதரிக்கிறேன். இதேபோல், அவர்களும் என்னை விரும்புகிறார்கள் என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  உங்கள் ஆட்சி காலத்தில்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது என்பதை நினைவுபடுத்திய நிருபரின் கேள்விக்கு ‘அது வேறொரு சூழலில் எடுக்கப்பட்ட முடிவு’ என முஷரப் பதிலளித்துள்ளார்.
  Next Story
  ×