என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் 62 பேரை பலிகொண்ட தொடர் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளை வேட்டையாட ராணுவம் மும்முரம்
Byமாலை மலர்24 Jun 2017 3:02 AM GMT (Updated: 24 Jun 2017 3:02 AM GMT)
பாகிஸ்தானில் 62 பேரை பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்புக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதிகளை தேடும் பணியில் உளவுத்துறை மற்றும் அந்நாட்டு ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தின் அருகே ரமலான் மாதம் என்பதால் நேற்று அதிகளவிலான மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். அப்போது, அங்கு வந்த சந்தேகத்துக்குரிய காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, காரில் இருந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இந்த கோர தாக்குதலில் 7 போலீசார் உள்பட 13 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 9 பேர் உள்பட 20 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாகவே, ஒரு மணி நேர இடைவேளையில் குர்ராம் நகரத்தில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியான பரச்சினாரில் உள்ள சந்தையில் இரட்டை குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.
இந்த தாக்குதலில் 455 பேர் பலியானதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேற்கண்ட மூன்று குண்டு வெடிப்புகளுக்கும் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலையடுத்து, ஆவேசமடைந்துள்ள அந்நாட்டு ராணுவம் தெரிக்-இ-தாலிபான் மட்டுமல்லாமல் மற்ற தீவிரவாத இயக்கங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, உளவுத்துறையுடன் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினரோடு இணைந்து சிறப்பு நுண்ணறிவு போலீசார், சட்டம் ஒழுங்கு முகமைகள் ஈடுபடும் என ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X