என் மலர்

  செய்திகள்

  அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு
  X

  அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இடம் பெற்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
  பீஜிங்:

  அணுசக்தி பொருட்கள் சப்ளை செய்யும் நாடுகள் குழுவில் 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெற இந்தியா விண்ணப்பித்து உள்ளது. இதற்கு, குழுவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த குழுவில் இந்தியாவை சேர்க்கவேண்டும் என்றால், பாகிஸ்தானையும் அனுமதிக்க வேண்டும் என்று சீனா பிடிவாதமாக கூறி வருகிறது.

  இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அணுசக்தி பொருட்கள் சப்ளை நாடுகள் குழுவின் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், அணுசக்தி பொருட்கள் சப்ளை நாடுகள் குழுவில் இந்தியா சேர்க்கப்படுமா? என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங்யிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.

  அதற்கு அவர், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்ப்பது இல்லை என்ற நிலைப்பாட்டில் சீனா தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என்று பதில் அளித்தார். அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் பாரபட்சமாக இருப்பதாக கூறி, அதில் கையெழுத்திட இந்தியா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×