என் மலர்tooltip icon

    உலகம்

    • டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்தார்.
    • சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர், குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

    டெல்டா போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது. விமானம் நின்ற சிறிது நேரத்திலேயே, போலீசார் விமானி அறையில் நுழைந்து பகவாகரை கைது செய்தனர்.

    குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடந்து வருகிறது. பகவாகர் மீதான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்ததாக கூறிய டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. 

    • அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" என்ற மூளை நோய் இருப்பதாக கூறியுள்ளார்.
    • ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்திய லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது ஷேன் தமுரா என்பவரும், தன்னைத்தனே சுட்டுக்கொண்டதில் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

    போலீஸ் கூற்றுப்படி, உயிரிழந்த சந்தேகத்திற்கிடமான ஷேன் தமுரா, கைத்துப்பாக்கிக்கான உரிமம் பெற்றிருந்தார். காலாவதியான தனியார் துப்பறிவாளர் உரிமமும் அவரிடம் இருந்துள்ளது.

    அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 6:40 மணியளவில் மன்ஹாட்டனின் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தின் வரவேற்பறையில் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    பின்னர் அவர் 33வது தளத்திற்குச் சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். அவரிடம் ஒரு தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" (Chronic Traumatic Encephalopathy - CTE) என்ற மூளை நோய் இருப்பதாக எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பவம் நடந்த மிட் டவுன் மன்ஹாட்டன் கட்டிடத்திலிருந்து 15 நிமிடங்கள் தொலைவில், ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
    • சுமார் 80 ஆயிரம் பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

    ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    பாதிக்கப்பட்ட 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர்.

    தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேரை காணவில்லை.

    மியுன் மாகாண அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், சீனாவில் பெய்துள்ள கனமழை,வெள்ளத்திற்கு இதுவரை 34 பேர் பலியாகினர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    • உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
    • ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் உக்ரைனின் சிறைச்சாலை, மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தனர்.

    கீவ்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, போர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட புதினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனாலும் அதைப் பொருட்படுத்தாத ரஷியா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் மூலம் சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.

    மத்திய உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரஷிய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

    இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    இவை வேண்டுமென்றே, நடத்தப்பட்ட தாக்குதல்கள். தற்செயலானவை அல்ல என தெரிவித்தார்.

    • குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது.

    சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.

    இதையடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்தது. இருந்த போதிலும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

    இந்த நிலையில் மேலும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது. இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும்.

    மேலும் 2022 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பகுதியளவு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் அடையும். குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமையைக் குறைக்க உதவும். இளம் தம்பதிகளின் கருவுறுதல் கவலைகளைத் தணிக்கும் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரி வித்துள்ளது.

    சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.

    • தான் தலையிடாவிட்டால், இரு நாடுகளும் இந்நேரம் போரில் ஈடுபட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
    • இந்தியா-பாகிஸ்தான் அவற்றில் மிகப்பெரியது.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் எழுந்தபோது சரியான நேரத்தில் தான் தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    தான் தலையிடாவிட்டால், இரு நாடுகளும் இந்நேரம் போரில் ஈடுபட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸ்காட்லாந்தில் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், சமீப காலங்களில் உலகம் முழுவதும் ஆறு போர்களைத் தடுத்ததாகக் கூறினார்.

    "நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். இந்தியா-பாகிஸ்தான் அவற்றில் மிகப்பெரியது. ஏனென்றால் இவை இரண்டும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள்.

    அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், போர் அதிகரிப்பு மற்றும் அணு ஆயுத வீழ்ச்சி போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களை நான் நன்கு அறிவேன். போருக்குச் செல்ல விரும்பினால் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் ஏற்கனவே பலமுறை கருத்து தெரிவித்துள்ளதும் அதை மத்திய அரசு மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  

    • புதின் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், பலர் இறக்கிறார்கள்.
    • ஒரே இரவில் 300க்கும் மேற்பட்ட டிரோன்கள், 4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷியா ஏவியது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாகக் குறைத்துள்ளார்.

    ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    "புதின் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், பலர் இறக்கிறார்கள். இனி காத்திருக்க எந்த காரணமும் இல்லை, எந்த முன்னேற்றமும் இல்லை" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    காலக்கெடு குறைக்கப்பட்ட போதிலும், உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரே இரவில் 300க்கும் மேற்பட்ட டிரோன்கள், 4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    • பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் நடந்தது.
    • துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    காவல்துறையின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத ஒருவர் சந்தையில் நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மக்கள் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவத்தின் நோக்கம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இது தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான தற்போதைய எல்லை மோதல்களுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.

    அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இறுதியாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருவருக்கும் இடையே ஒரு பெரிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    ஸ்காட்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் ரிசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான குறைந்தபட்ச வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 

    இதுவரை கண்டிராத மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 15 சதவீத வரி விதிக்கும் என்று அவர் கூறினார்.

    அமெரிக்காவிலிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    அமெரிக்காவில் மேலும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க இராணுவ தயாரிப்புகளையும் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர் உர்சுலா, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

    அமெரிக்காவிடமிருந்து எல்என்ஜி, எண்ணெய் மற்றும் அணு எரிபொருளை வாங்குவோம் என்று அவர் கூறினார். இந்த கொள்முதல்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறும் என்று அவர் கூறினார். ரஷிய எரிபொருட்களிலிருந்து பிற ஆதாரங்களுக்கு மாறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    விமானங்கள், சில வகையான இரசாயனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் பிற முக்கியமான மூலப்பொருட்களுக்கு இருதரப்பு வரிச் சலுகைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சுமார் 1.6 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.
    • தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம்.

    தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக திடீர் மோதல் வெடித்தது. இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் தொலை பேசியில்நீண்ட நேரம் பேசினார்.

    இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சவார்த்தையில் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயா அந்நாட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார்.

    கம்போடியா பிரதமர் ஹூன் மானெட் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

    இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூக உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகள் இடையே அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி, எல்லை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இடையில் நீடித்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

    மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் ஒரு கும்பல் நுழைந்தது.
    • அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது.

    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கோமாண்டா நகரில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. உயிருக்கு பயந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    மேலும் அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது. அதில் வீடுகள், கடைகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக தேவாலயம் அருகில் உள்ள மக்சோஸ்கனி கிராமத்தில்இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் 5 பேர் இறந்தனர்.

    கோமாண்டா நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டையில் இருந்து வந்த இக் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வப் போது இவர்கள் பொதுமக்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சக பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவரை விமானத்துக்குள்ளேயே மடக்கி பிடித்தனர்.
    • விமானம் தரை இறக்கப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    ஸ்காட்லாந்து லூட்டனில் இருந்து கிளாஸ்சோலுக்கு ஈசிஜெட் பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பின்புற இருக்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டு உள்ளது என சத்தம் போட்டார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் கோஷமிட்டார்.

    இதனால் சக பயணிகள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். உடனே சக பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவரை விமானத்துக்குள்ளேயே மடக்கி பிடித்தனர். உடனே அந்த விமானம் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் ரகளையில் ஈடுபட்ட பயணியை கைது செய்தனர். மேலும் விமானம் மற்றும் அவர் கொண்டு வந்த பைகளையும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. அவர் புரளியை கிளப்பியது தெரியவந்தது. 41 வயதான அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்காட்லாந்தில் டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு எதிராக எடின்பரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஸ்காட்லாந்தில் நடுவானில் விமானத்தில் டிரம்புக்கு எதிராக பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×