என் மலர்
உலகம்
- ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
- சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.
YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும்.
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
- ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரிட்டனை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.
தங்கள் எல்லையில் உள்ள பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது எதிர்காலத்தில் பிரிட்டனுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதிகளை திருப்திப்படுத்துவது பலனளிக்காது என்றும், பிரிட்டனிலும் அதுவே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்த முடிவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
- பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்தவர்கள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் இன்று காலை வரை காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு நகரமான கஸ்னியில் உள்ள சிக்கிம் கிராசிங்கில் உதவி வாகனங்களுக்காக காத்திருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்து.
ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் வடக்கு நகரங்களான பெய்ட் லாஹியா மற்றும் பெய்ட் ஹனூனில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு நகரமான கான் யூனிஸில் உதவி வாகனங்கள் காத்திருக்கும்போது, செவ்வாய்க்கிழமை மாலை கொல்லப்பட்ட 16 பேரின் உடல்கள் வந்து சேர்ந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (புதன்கிழமை) நுசைரத் நகரில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், காசாவில் மேலும் ஏழு பேர் பட்டினியால் இறந்தனர். இதனால் பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
- முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை மாலை பிரிட்டன் தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது.
இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில் இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக NATS தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிப்பு.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அறிவித்துள்ளார்.
- போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புக்கொள்ளாமல் உக்ரைன் மீதான தாக்குதலை அதிகரித்து வருகிறது.
- அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.
இதனால் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின் மீது விரக்தியில் உள்ளார். ரஷியாவுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கெடுவுக்குள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில், கடுமையான தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த போதிலும், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
செர்னிவ் பிராந்தியத்தில் ஹோன்சரிவ்ஸ்கே அருகே உள்ள உக்ரைனின் 196ஆவது பயிற்சி மையத்தில் இரண்டு இஸ்கந்தர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளளது.
இதற்கிடையே 78 டிரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஜெட்-பவர்டு (jet-powered) டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
- நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது
- சுனாமி தாக்கியதையடுத்து கடற்கரையோரத்தில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கில் இருந்து சுமார் 136 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8-ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள், சரிந்து விழுந்தன. ஜன்னல் கண்ணாடி உடைந்தன. மேலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடற்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. அங்கு சுமார் 4 மீட்டர்(13 அடி உயரம்) வரை அலைகள் எழுந்தன. ரஷியாவின் குரில் தீவுகளின் பரமுஷிர் தீவில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் சுனாமி கடுமையாக தாக்கியது.
கடலில் இருந்து வெளியேறிய ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தது. அங்கிருந்த கட்டிடங்களை சுனாமி அலைகள் சூழ்ந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுனாமி தாக்கியதையடுத்து கடற்கரையோரத்தில் வசித்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். குரில் தீவுகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளன.
கம்சட்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவு, அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் பசிபிக் பெருங்கட லின் பிற பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மேலும் கனடா, ஆஸ்திரேலியா, சிலி, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா, வட கொரியா உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் ரஷியாவின் நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ பகுதியை தாக்கியது. அங்கு சுமார் 2 அடி உயரத்தில் அலைகள் ஏற்பட்டன. அதேபோல் இஷினோமாகி பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கின. அங்கு சுமார் 1.6 அடி உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது.
ஹொக்கைடோவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் வேகமாக தாக்கின. வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஹமனகா நகரம் மற்றும் ஜப்பானின் பிரதான தீவில் உள்ள இவாட்டில் உள்ள குஜி துறைமுகத்தை 2 அடி உயர சுனாமி அலைகள் அடைந்தன என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை களைத் தாக்கக்கூடும் என்றும், ஒசாகாவிற்கு அருகிலுள்ள வகயாமா வரை தெற்கே சுனாமி அலை தாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஒலிகள் எழுப் பப்பட்டன. உடனே மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், வீட்டு மாடிகளிலும் தஞ்சம் அடைந்தனர். ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரத்தில் வசிக்கும் சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஹொக்கைடோ முதல் தெற்கில் ஒகினாவா வரையில் 133 நகராட்சிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கா -மெக்சிகோ எல்லையில் இருந்து வடக்கு நோக்கி ஓரிகான், வாஷிங்டன், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும், தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பம் வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷியாவின் பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் 4 மணி நேரத்தில் கலிபோர்னியாவை தாக்க கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அலாஸ்கா கடற்கரையில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதற்கிடையே ஜப்பான்-ஹவாய் இடையே உள்ள மிட்வே அட்டோல் பகுதியில் 6 அடி அளவிலான அலைகள் எழும்பியது.
சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உட னடியாக தகவல்கள் வெளியாகவில்லை. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
இதற்கிடையே சுனாமி எச்சரிக்கையை அடுத்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் கூறும் போது, கலிபோர்னியா, அமெரிக்காவின் பிற மேற்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் ஹவாயில் வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண் டும் என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அதே சமயம் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆகவே கடலோர பகுதி மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தோ னேசியாவின் சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அதே அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலகில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் முதல் 10 இடத்துக்குள் தற்போது கம்சட்சா தீபகற் பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும் இடம் பெற்றுள்ளது.
- ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் Mr Beast சேனலை நடத்தி வருகிறார்.
- 2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.
உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்குகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக யூடியூப்பில் விடை கிடைக்கும்.
யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், இணைய பயனர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி அதில், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.
2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.
இந்நிலையில், யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றை மிஸ்டர் பீஸ்ட் படைத்துள்ளார்.
இதனை கௌரவிக்கும் விதமாக யூடியூப் CEO நீல் மோகன் அவருக்கு பிரத்யேக Play Button வழங்கி கௌரவித்தார்.
- ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
- ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது. இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளார். அவரது பதிவில், "பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கும் சுனாமி பாதிப்பு உள்ளது. ஆகவே உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
- ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
- ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான், ஹவாய், அலாஸ்கா மற்றும் ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- "எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
- மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
பாலஸ்தீன ஆர்வலரும் ஆசிரியருமான அவுடா ஹாதெலின், ஆஸ்கார் விருது பெற்ற "நோ அதர் லேண்ட்" திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில் அவுடா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரான் மலைகளுக்கு அருகிலுள்ள உம் அல்-கைர் கிராமத்தில் திங்கள்கிழமை, இஸ்ரேலிய குடியேற்றக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
ஹதலினின் கொலை ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கரையில் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியர்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அக்டோபர் 2023 இல் இருந்து, கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.






