என் மலர்
உலகம்

ரஷியா, ஜப்பானை தொடர்ந்து அமெரிக்காவிற்கும் சுனாமி எச்சரிக்கை - டிரம்ப் பதிவு
- ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
- ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது. இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளார். அவரது பதிவில், "பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கும் சுனாமி பாதிப்பு உள்ளது. ஆகவே உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.






