என் மலர்
உலகம்
- உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.
- காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும்.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic studies) கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது.
அக்டோபர் 7, 2023 (ஹமாஸ் தாக்குதல்) அன்று, உளவுத்துறை தோல்வி, ஈரான் தொடர்பான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமை உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாகும்.
எனவே, எதிரி நாட்டின் மொழி மற்றும் மரபுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும் 50 சதவீத வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழி கற்பிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, காட் பயன்படுத்தப்படும். காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும். இது ஏமன் மற்றும் பிற அரபு பகுதிகளில் நுகரப்படுகிறது.
இதன் காரணமாக, அவர்களின் பேச்சு தெளிவின்மை கொண்டது. வீரர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் காட் எடுக்கும்போது, அவர்களின் பேச்சும் அரேபியர்களைப் போலவே ஒலிக்கிறது. அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்பிக்க ஒரு துறையும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
- இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADF-ன் நோக்கம்.
காங்கோவின் கிழக்கு பகுதியான கோமண்டாவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று, இஸ்லாமிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை அலைய்ட் டெமாக்ரடிக் ஃபோர்ஸ் (ADF) உறுப்பினர்கள் அதிகாலை 1 மணியளவில் நடத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோமண்டாவில் சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர் டியூடோன் டியூரந்தாபோ, 21-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
உகாண்டா மற்றும் காங்கோ எல்லைப் பகுதியில் செயல்படும் ADF, பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADF-ன் நோக்கம்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இடுரியில் நடந்த தாக்குதல்களில் ADF குழு 12க்கும் அதிகமானோரை கொன்றது குறிப்பிடத்தக்கது.
- காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும்
- இங்கிலாந்து உட்பட பல நாடுகள் காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை பெரிய அளவில் நகர்த்தி வருகின்றன.
காசாவில் பஞ்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உணவு மற்றும் மருந்து காசாவிற்குள் நுழைய அனுமதிக்க மூன்று பகுதிகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
காசாவில் பட்டினியால் உயிரிழநதோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இந்த முடிவுக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகள் அந்தப் பகுதியை அடைய அனுமதிக்க ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த குறுகிய கால போர்நிறுத்தம் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்குப் பொருந்தும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அறிக்கையின்படி, அல்-மவாசி, டேயர் அல்-பலா மற்றும் காசா நகரில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இஸ்ரேல் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது.
மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும். மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த வழித்தடங்கள் வழியாக எடுத்துச் செல்லலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் இறக்கி அனுப்ப மற்ற நாடுகளை இஸ்ரேல் அனுமதித்தது. இந்தச் சூழலில், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை பெரிய அளவில் நகர்த்தி வருகின்றன. எகிப்திலிருந்தும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
- இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நினைவூட்டுகிறது
- இந்த மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஐ எட்டியுள்ளது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தனது மத்தியஸ்தத்தால் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியிருப்பது தெரிந்ததே.
சமீபத்தில், அவர் மீண்டும் அமைதியின் தூதராக மாறியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்தார். உடனடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
இரு நாடுகளின் தலைவர்களிடமும் தனித்தனியாக பேசியதாகக் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார்.
மோதல்கள் இப்படியே தொடர்ந்தால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் ஆபத்தில் இருக்கும் என்று இருவரையும் எச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறிய அவர், அவர்கள் உடன்பாட்டிற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக கூறினார்.
"இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தம் மற்றும் அமைதியை நாடுகின்றனர். அவர்களுக்கு நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரம் உள்ளது. வரும் ஆண்டுகளில் அவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நம்புகிறேன். ஒரு சிக்கலான சூழ்நிலையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன். இந்த போரில் பலர் கொல்லப்படுகிறார்கள், இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நினைவூட்டுகிறது" என்று டிரம்ப் தெரிவித்தார்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல்கள் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டின. இந்த மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஐ எட்டியுள்ளது. 130,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
- ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
- 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது தரையிறங்கும் கியர் பழுதடைந்ததால் டயர் தீப்பிடித்தது. இதனால் ஓடுபாதையில் அடர்த்தியான புகை கிளம்பியது.
எச்சரிக்கையான விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சுமார் 3 ஆயிரத்து 870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
- பெரும்பாலானோர் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக திறன்களை கொண்டவர்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. நாசாவிலும் ஏற்கனவே ஒருமுறை ஆட்குறைப்பு செய்யப்பட்டது.
தற்போது 2-வது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதாவது சுமார் 3 ஆயிரத்து 870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் குறைந்தது 2 ஆயிரத்து 145 நாசாவின் மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடிதம் அனுப்பியது. அவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக திறன்களை கொண்டவர்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், உலகின் முன்னணி விண்வெளி நிறுவனம், ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு ஜனவரியில் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவுகளுக்கு இணங்க குறைந்தது 3 துறைகளை மூடப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் 20 சதவீதம் வரை ஆட்குறைப்பு இருக்கும் என்றும், எண்ணிக்கை வேறுபடலாம் என்றும் செய்திதொடர்பு அதிகாரி ஒருவர் நேற்று கூறி உள்ளார்.
இதற்கிடையே கடந்த 20-ந்தேதி நூற்றுக்கணக்கான நாசா ஊழியர்கள், விண்வெளி அருங்காட்சியகம் அருகே திரண்டு போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று.
- இதனால் வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வாஷிங்டன்:
காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே காலநிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை ஐ.நா.சபை வலியுறுத்துகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, வட கரோலினாவில் 113 டிகிரி, வாஷிங்டன் டி.சி.யில் 109 டிகிரி என வெயில் கொளுத்துகிறது. இதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் திணறுகின்றனர். இதனால் சுமார் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 29-ம் தேதி வரை இந்த வெயில் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.
- போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.
மனைவி விவாகரத்து செய்ததால் மிகவும் வருத்தமடைந்த ஒருவர், ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல், பீர் மட்டுமே குடித்து உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தாய்லாந்தில் நடந்தது.
44 வயதான தவீசக் தனது மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார். அவர்களுக்கு பதினாறு வயது மகன் இருந்தான். மகனை தவீசக்கிடம் விட்டுவிட்டு அப்பெண் வெளியேறினார்.
மனைவி தன்னை விட்டுச் சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தவீசக், சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். நாள் முழுவதும் பீர் குடித்துக்கொண்டிருந்தார்.
இதனால் அவரது உறுப்புகள் செயலிழந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.
இருப்பினும், தொண்டு நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் தவீசக் இறந்துவிட்டார். போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.
அதிகப்படியான மது அருந்தியதால் அவர் இறந்ததாக போலீசார் முதற்கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
- பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
- தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்றக் கட்டடத்தின் மீது மரம் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.
தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளது. இங்கு தீவிரவாதக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன.
- பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுகிறது.
- எல்லைப் பகுதிகளில் இருந்து 138,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
கம்போடியாவில் நடந்த மோதல்களில் எட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில், 15 பேர் இறந்துள்ளனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் இருந்து 138,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் எல்லையில் உள்ள சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட காரணமாகும்.
இந்நிலையில் அண்மையில், எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதனால் தாய்லாந்து கம்போடியா மீது போர் விமானங்கள், பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. கம்போடியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் குறித்து ஐநா கவலை தெரிவித்தது. இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு கூட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை விரும்புவதாகவும், நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைக்கு அமைதியான தீர்வைக் காண முயற்சிப்பதாகவும் கம்போடியா தெரிவித்துள்ளது.
- சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது.
- இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது.
இத்தாலியில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துள்ளன வீடியோ வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை, பிரெசியா நகருக்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது. விமானி உட்பட இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். மேலும் விமானம் வெடித்ததில் இரண்டு பைக்கர்கள் காயமடைந்தனர்.
அவசரமாக தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஃப்ரெசியா ஆர்ஜி அல்ட்ராலைட் விமானம் கார்பன் ஃபைபரால் ஆனது. இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது. விமானம் அதிவேகத்தில் சாலையில் மோதிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
- லிசாவுக்கு ஜோசப்பின் 5.5 மில்லியன் யூரோ (ரூ.47 கோடி) மதிப்புள்ள சொத்து சொந்தமானது.
- ஜோசப்பின் பணத்தைப் பெறுவதற்காக அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்ட சூழ்ச்சிகாரியாக சித்தரிக்கின்றனர்.
அயர்லாந்தின் ஆஃபாலி கவுண்டியில் ஜோசப் க்ரோகன் என்ற 75 வயது பணக்கார நில உரிமையாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், லிசா ஃபிளாஹெர்டி (50) என்ற பணிப்பெண்ணை ரகசியாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த ரகசிய திருமணம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஜோசப் க்ரோகன் இறந்தார். இதன் மூலம் லிசாவுக்கு ஜோசப்பின் 5.5 மில்லியன் யூரோ (ரூ.47 கோடி) மதிப்புள்ள சொத்து சொந்தமானது.
ஆனால் ஜோசப்பின் திருமணம் மற்றும் மரணம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி அவரின் குடும்பத்தினர் லிசாவுக்கு 5.5 மில்லியன் யூரோ சொத்து கிடைக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தனர்.

குடும்பத்தினர் லிசாவை, ஜோசப்பின் பணத்தைப் பெறுவதற்காக அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்ட சூழ்ச்சிகாரியாக சித்தரிக்கின்றனர்.
ஆனால், லிசாவின் நண்பர்கள், இவர்களுக்கு இடையிலான உறவு 1991 ஆம் ஆண்டு லிசாவுக்கு 16 வயதாக இருந்தபோது தொடங்கியது என்றும், அவர் லிசாவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தார் என்றும் கூறுகின்றனர். ஜோசப், லிசாவின் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு தந்தை பிம்பமாக இருந்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ஜோசப் க்ரோகனின் மரணத்திற்கு புற்றுநோய் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடைய தொற்றுதான் காரணம் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்தனர்.
ஜோசப்பின் பெயரைப் பயன்படுத்தவும், அவரது பண்ணையை எடுத்துக்கொள்ளவும் லிசாவுக்கு முழு உரிமை உண்டு என்று அவரது நண்பர்கள் வாதிடுகின்றனர்.






