என் மலர்tooltip icon

    உலகம்

    • பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
    • 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை காணொளி மூலம் ஐநா சபையில் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

    ஐநா சபையில் பங்கேற்க விடாமல் தடுக்க அவரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ள நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

    முன்னதாக காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசா. இதைப் பற்றி சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

    H1B விசா யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

    * உயர் கல்வித் தகுதி (பொதுவாக Bachelor's அல்லது Master's degree) மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை கொண்டவர்கள்.

    * பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை பெறுபவர்கள்.

    யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

    * தனிநபர் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

    * அமெரிக்காவில் உள்ள நிறுவனம் (Employer) தான் விண்ணப்பிக்க வேண்டும்.

    செல்லுபடியாகும் காலம்:

    * ஆரம்பத்தில் 3 வருடம்.

    * அதிகபட்சம் 6 வருடம் வரை நீட்டிக்கலாம்.

    விசா தேர்வு முறை:

    * ஒவ்வொரு ஆண்டும் H1B lottery system மூலம் தேர்வு செய்கிறார்கள்.

    • வருடத்திற்கு சுமார் 65,000 விசா + Master's degree பெற்றவர்களுக்கு 20,000 விசா ஒதுக்கப்பட்டுள்ளன.

    சிறப்பம்சம்:

    * விசா பெற்றவர் அதே நிறுவனத்துக்கு (Employer) மட்டுமே வேலை செய்ய முடியும்.

    * நிறுவனத்தை (Employer) மாற்ற வேண்டுமென்றால் புதிய H1B transfer செய்ய வேண்டும்.

    நன்மைகள்:

    * அமெரிக்காவில் சட்டப்படி வேலை செய்யலாம்.

    * குடும்பத்தினரை (spouse, children) H4 visa மூலம் அழைத்துச் செல்லலாம்.

    * நிரந்தர குடியுரிமைக்கு (Green Card) வழிவகுக்கும்.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு நாளை (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு நாளை (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், H1-B விசா வைத்துள்ள இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் 24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    H1-B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதால், வெளிநாட்டு ஊழியர்கள் இப்போதைக்கு அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டாம் எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

    • ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது.
    • அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது. ஜூலை மாதம் 6% குறைந்தது

    இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 15% குறைந்துள்ளது.

    இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவில் வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
    • அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க குடியுரிமைக்கு வழிவகுக்கும் டிரம்ப் GOLD CARD விசாவை விற்பனைக்கு கொண்டுவருவதாகவும், அதற்கு 1 மில்லியன் டாலர் (ரூ.8.8 கோடி) விலை நிர்ணயிக்கப்போவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், வெளிநாட்டு ஊழியர்களை வேளைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு டிரம்ப் கார்ப்பரேட் GOLD CARD மூலம் 2 மில்லியன் டாலர் (ரூ.17.5 கோடி) விலை செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்க வரிகள், வருமானம் போன்ற எந்த நிபந்தனையுமின்றி 270 நாட்கள் அமெரிக்காவில் செலவிட 5 மில்லியன் டாலர் (ரூ.44 கோடி) விலையில் டிரம்ப் PLATINUM CARD அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    இதனிடையே அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. 

    • அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார்.
    • பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படத்துடன் அவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் என்று கூறப்பட்டது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார்.

    மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே மேக்ரான்ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்.

    அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    மேக்ரான் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.

    உண்மையில் இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் தொடங்கியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.

    மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார்.

    இதுதொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார். 

    • சிங்கப்பூரில் இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாடு நடைபெற்றது.
    • மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் இணைந்து சர்வதேச குற்றங்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வருவது இன்டர்போல் காவல் அமைப்பாகும்.

    இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வாகி உள்ளது.

    இந்தியாவில் இன்டர்போல் விவகாரங்களுக்கு பொறுப்பான மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இந்தியா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ட்டது, குற்ற கும்பல்கள், சைபர் குற்றங்கள், மனிதக் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என சிபிஐ தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

    • மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
    • இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

    சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

    வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,

    தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

    சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

    குறிப்பாக எல் ஃபாஷர் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. 

    • வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.
    • ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.

     ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் எட்டு மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர் விடுவிக்கப்பட்டனர்.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்தில் பீட்டர் ரெனால்ட்ஸ் (80) மற்றும் அவரது மனைவி பார்பி (76) வசித்து வந்தனர். அங்கு கல்வி மற்றும் பயிற்சி அமைப்பை அவர்கள் இணைந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி மேற்கு நாடுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்நிலையில் பல தரப்பின் தொடர் வலியுறுத்தலின் பேரில் பீட்டர் மற்றும் அவரது மனைவி பார்பீ ஆகியோரை தலிபான் அரசு தற்போது விடுதலைச் செய்துள்ளது.

    அவர்கள் இருவரும், நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தம்பதியினர் ஆப்கானிஸ்தான் சட்டத்தை மீறியதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான வைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

    அமெரிக்க படைகள் வெளியேறிய பின் கடந்த 2021 இல் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசாங்கத்தை இங்கிலாந்து அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
    • பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறியாளர் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    தெலங்கானா மாநிலம் மகிபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (30 வயது)

    அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் கடந்த செப்டம்பர் 3 அன்று அவரது அமெரிக்க அறை நண்பருடன் ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , காலை 6:08 மணியளவில் ஒரு வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு 911 என்ற எண்ணில் அழைப்பு வந்தது.

    சந்தேக நபர் வீட்டில் ஒரு பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக அழைப்பாளர் கூறினார். SCPD அதிகாரிகள் வந்து சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவர் இனவெறியால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

    நிஜாமுதீன், தான் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்ட பதிவில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.

    மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அண்மையில், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டு கொலை முயற்சி நடந்ததாகவும், அநீதிக்கு எதிராகப் போராடியதால் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உதவி கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

    இந்த உரையாடலில் வர்த்தகம், ஃபென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.

    அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.

    டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும் டிரம்ப் தனது நன்றி தெரிவித்தார்.

     முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன.

    பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது. 

    ×