என் மலர்
உலகம்

ஆண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணம் - H-1B விசா என்றால் என்ன! - முழு விவரம்
- H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
- 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசா. இதைப் பற்றி சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.
H1B விசா யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
* உயர் கல்வித் தகுதி (பொதுவாக Bachelor's அல்லது Master's degree) மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை கொண்டவர்கள்.
* பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை பெறுபவர்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
* தனிநபர் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.
* அமெரிக்காவில் உள்ள நிறுவனம் (Employer) தான் விண்ணப்பிக்க வேண்டும்.
செல்லுபடியாகும் காலம்:
* ஆரம்பத்தில் 3 வருடம்.
* அதிகபட்சம் 6 வருடம் வரை நீட்டிக்கலாம்.
விசா தேர்வு முறை:
* ஒவ்வொரு ஆண்டும் H1B lottery system மூலம் தேர்வு செய்கிறார்கள்.
• வருடத்திற்கு சுமார் 65,000 விசா + Master's degree பெற்றவர்களுக்கு 20,000 விசா ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சம்:
* விசா பெற்றவர் அதே நிறுவனத்துக்கு (Employer) மட்டுமே வேலை செய்ய முடியும்.
* நிறுவனத்தை (Employer) மாற்ற வேண்டுமென்றால் புதிய H1B transfer செய்ய வேண்டும்.
நன்மைகள்:
* அமெரிக்காவில் சட்டப்படி வேலை செய்யலாம்.
* குடும்பத்தினரை (spouse, children) H4 visa மூலம் அழைத்துச் செல்லலாம்.
* நிரந்தர குடியுரிமைக்கு (Green Card) வழிவகுக்கும்.






