என் மலர்
உலகம்
- கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது.
- இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. எட்டு LS-6 என வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பொது மக்கள் பலர் உயிரிழந்து வரும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது. இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். நிலப்பரப்பை மலைகள் சூழ்ந்துள்ள இந்த மாகாணம் இயற்கையாகவே மறைவிடத்திற்கு வழிவகுத்துள்ளது.
சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், தங்களுடைய தளத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
- இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
- பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் சமீபத்திய முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அளிக்கப்படும்.
அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரித்து வரும் தலைவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை. ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன அரசு இருக்காது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு எதிராக, அந்தப் பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்திருக்கிறேன். இதை நாங்கள் உறுதியுடனும், சாதுர்யமான அரசியல் திறமையுடனும் செய்துள்ளோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூதக் குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம், மேலும் இந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
- 1946 – 1964 காலகட்டத்தில் பிறந்தவர்கள் பூமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
- 1981-96 காலகட்டத்தில் பிறந்தவர்கள் மில்லியனில் என்று அழைக்கப்படுகிறார்கள்.
15 ஆண்டுகாலம் என்பது தற்போது ஒரு தலைமுறை என்று கூறப்படுகிறது. அவ்வகையில் ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். 1946 – 1964 காலகட்டத்தில் பிறந்தவர்கள் பூமர்கள் என்றும் 1981-96 காலகட்டத்தில் பிறந்தவர்கள் மில்லியனில் என்றும் அதன் பின்னர் 1997 to 2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள் ஜென் Z என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், மில்லியனில் என சொல்லப்படும் 1981-96 காலகட்டத்தில் பிறந்தவர்கள் அதிகம் படித்த தலைமுறையினராக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் குறைவான சம்பளம் பெறுபவர்களாகவும், பொருளாதார ரீதியில் நிலையற்ற தன்மையுடன் தள்ளாடுபவர்களாக இருப்பதாகவும் மில்லியனில் தலைமுறையினர் கவலைப்படுவதாக கூறப்படுகிறது.
- டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சார்லி கிர்க்கின் மனைவியை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.
- டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
- இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்..
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்..
முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், "எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது" என்று தெரிவித்தார். டிரம்ப் - எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர்.
சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து இருவரும் உரையாடினர். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் நட்பு துளிர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
- அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி - தெற்காசிய திறமைமிகு ஊழியர்களை இழுக்க களம் இறங்கும் சீனா
இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K-விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.
H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது. அக்டோபர் 1 முதல் K-விசா நடைமுறைக்கு வருகிறது.
- அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார்.
- ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும் என்றார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார்.
இதற்கிடையே தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும்.
அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்றார்.
இந்நிலையில் டிரம்ப் மிரட்டலை தாலிபான் அரசு நிராகரித்துள்ளது.
இத்தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி பஸிஹுதீன் ஃபித்ரத், "சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர்.
ஆனால் எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது." என்று தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசு, "நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை" என தெரிவித்துள்ளது.
- இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
- கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று தெரிவித்தார்.
கஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படாமல், இந்தியாவுடனான இயல்பான உறவு பகல் கனவாகவே இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனில் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் , வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, "இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்களின் தியாகங்கள் வீணாகக் கூடாது. அவர்களின் இரத்தம் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அமைதி சாத்தியமில்லை. இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், அந்தப் பணத்தை பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக செலவழித்திருந்தால், நாடு அதிகம் வளர்ந்திருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டுமா அல்லது சண்டையிலேயே தொடர வேண்டுமா என்பது நம் கைகளில்தான் உள்ளது.
காஷ்மீர் மற்றும் காசா ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
- வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
- நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாகிஸ்தானில் டியூசன் சென்டர் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 ஆசிரியர்கள், 7 மாணவர்கள் உயிரிழந்தனர்.
லாகூருக்கு வடமேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள ஹபீசாபாத் நகரில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
டியூஷன் சென்டரின் கூரை இடிந்து விழுந்தபோது வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
மீட்புப் பணியாளர்கள், ஆறு முதல் பத்து வயது வரையிலான ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஏழு பேரின் உடல்களை மீட்டனர்.
மேலும் படுகாயமடைந்த நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சமீபத்திய பலத்த மழை கட்டிடத்தை பலவீனப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
காசா சிட்டி:
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு
வரவேற்பு தெரிவித்துள்ளது.
- இந்திய ஐ.டி. ஊழியர்களை பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்தது. இந்தியாவின் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் சபஹார் துறைமுகம் மீதான தடைகளையும் விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டது.
மேலும், இந்திய ஐ.டி. ஊழியர்களை பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ்,
கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இரு கட்சிகளைச் சேர்ந்த அரசுகளும் கடந்த 30 ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த இந்திய-அமெரிக்க நட்புறவை, டிரம்ப் நிர்வாகம் சீர்குலைத்துவிட்டது.
இது கொள்கை சார்ந்த முடிவு என்பதை விட, தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்தியா போன்ற பெருமையும் வலிமையும் வாய்ந்த ஒரு நாட்டை புறந்தள்ளினால் அது ரஷியா, சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கமாகும் அபாயம் உள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தக் கருத்துகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
- இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் (49) என்பவர் பெட்ரோல் பங்கை நிர்வகித்து வந்தார். இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை எறிந்து விட்டு கிரண் படேல் தப்பி ஓடினார். அப்போது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் கிரண் பட்டேல் உயிரிழந்தார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இந்திய பெண்ணை சுட்டு கொன்றது ஜேடன் மேக் ஹில்(வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






