என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ராகுல், ஜடேஜா, ஜூரல் ஆகியோர் சதம் விளாசினர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ராகுல், கில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் விளாசிய கையோடு கில் (50) ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவரும் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ஜூரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு இருவரும் சதம் அடித்து அசத்தினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு சில ஓவர்களே இருந்த நிலையில் ஜூரல் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்தது.ஜடேஜா 104 ரன்னுடனும் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
- புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
பின்னர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
- காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும்.
- அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூரில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரெயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 5 சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கடைசி சிறப்பு ரெயில் 6.25 மணிக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து புறப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி அந்த ரெயில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 6.10 மணிக்கு காட்டாங்குளத்தூரை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
- சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவ தாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, நாகை மாலி எம்.எல்.ஏ., மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோர் இன்று காலை கரூர் வந்தனர்.
அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் காலணிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயது குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் சம்பவத்தில் உயிரிழந்த ஒரே ஊரைச் சேர்ந்த அதாவது ஏமூர் புதூரைச் சேர்ந்த நான்கு பேரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர், சுங்ககேட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஹேமலதாவின் கணவர் மற்றும் அதன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
- நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
- கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.
கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்!
#KarurTragedy-யின் போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதல்வரே...
நான் கேட்கிறேன்-
வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?
ஆட்சி நிர்வாகத்தில் Failure,
நிதி நிர்வாகத்தில் Failure,
சட்டம் ஒழுங்கைக் காப்பதில் Failure,
பெண்கள் பாதுகாப்பை உறுதி
செய்வதில் Failure,
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் Failure,
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் Failure,
என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் Failure Model திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே ,
எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை!
உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம்!
இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன?
உங்களைப் போல் அல்லாமல், "கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு" என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி.
உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது ?
சரி... பயப்படுறீங்க... இருக்கட்டும்!
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டது.
- தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்தது.
- தங்கம் விலை இன்று காலை ஒரு சவரன் 86,720 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி (நேற்று முன்தினம்) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்தது.
காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, நேற்று முன்தினம் விலையிலேயே நேற்று விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலை தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 10,840 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 86,720 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்ம் 10,900 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 87,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
- நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் நீதிபதி கூறியதாவது:-
விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? தவெக பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம்?
விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.
வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்கள்?
சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது.
- கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது. கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.
தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர்.
கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா?
இவ்வாறு கூறியுள்ளார்.
- ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்
- இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா துறையினர் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என தவெக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். உடனே அதனை நீக்கவும் செய்தார். அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா? எனவும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
- கரூர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க உத்தரவு.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மமுன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் குறித்து அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் விவகாரம் தொடர்பாக அஸ்ரா கார்க் ஐஜி வடக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
- முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மமுன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
- செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
நாளை (அக்டோபர் 4-ந்தேதி) புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
"உப" என்றால் "சமீபம்" என்று பொருள். "வாசம்" என்றால் "வசிப்பது" என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற் கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.






