என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களுக்கு ஏற்பாடு
- காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும்.
- அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூரில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரெயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 5 சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கடைசி சிறப்பு ரெயில் 6.25 மணிக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து புறப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி அந்த ரெயில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 6.10 மணிக்கு காட்டாங்குளத்தூரை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






