என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
    X

    விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    • கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
    • நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    அப்போது விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் நீதிபதி கூறியதாவது:-

    விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? தவெக பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம்?

    விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.

    வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்கள்?

    சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது

    சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×