search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
    • அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.

    வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

    அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-

    1. ஆதார் அட்டை

    2. பான் அட்டை

    3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை

    4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.

    5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.

    6. ஓட்டுனர் உரிமம்.

    7. பாஸ்போர்ட்

    8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.

    9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.

    10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.

    • அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார்.
    • பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறஹ்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் முறையே ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சாம் கர்ரன், பிரப்சிம்ரன் சிங் முறையே 6 மற்றும் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்பிரீத் சிங் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

    இதன் காரணமாக பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சஷான்க் சிங் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய ஹர்பிரீத் சிறப்பாக ஆடினார்.

    19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மோத்வால் 2 விக்கெட்களையும், ஸ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்
    • இந்த முறை ஒவைசிக்கு போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

    மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்

    இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா தனது செயலால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 3 சிக்சர் அடித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த பொல்லார்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

    ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 224 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த முறை கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
    • தெலுங்கானாவில் 4 இடங்களில் வென்றிருந்தது.

    பா.ஜனதா கூட்டணி 400 இலக்கை நிர்ணயித்து மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது. தனியாக 370 இலக்கை நிர்ணயித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களை கூட தாண்டாது எனக் கூறி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி 15 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்த முறை தென்மாநிலங்களில் எங்களுடைய செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. தெற்கில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் மோடி நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆர்வமாக உள்ளனர்.

    நாட்டின் பாதுகாப்பையும் வளத்தையும் உறுதிப்படுத்த மோடிக்கு பெரும்பான்மையான 400 இடங்களை வழங்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    கடந்த மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

    • சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ரபாடா மற்றும் சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் திலக் வர்மா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • பைசாகி திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2,400 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
    • ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது என்றார் மரியம் நவாஸ்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 2,400 சீக்கியர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாகிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் பங்கேற்றார். அப்போது சீக்கிய யாத்திரிகர்கள் குழுவைச் சந்தித்தார். அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த யாத்திரிகர்கள்.

    அப்போது பேசிய மரியம் நவாஸ், ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது. அவர்களுக்காக இதயத்தைத் திறக்கவேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பாக, தனது தந்தை நவாஸ் ஷெரிப் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது
    • பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதற்கு முன்னதாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • பனிகேல் V4 S மாடலின் விலை ரூ. 2.2 லட்சம் அதிகம் ஆகும்.
    • இந்த பைக்கில் டூயல் பீம் அலுமினியம் ஃபிரேம் உள்ளது.

    அப்ரிலியா நிறுவனத்தின் RSV4 ஃபேக்டரி மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை ரூ. 31 லட்சத்து 26 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக அப்ரிலியா RSV4 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    பிளாக்ஷிப் மாடல் என்பதால் RSV4 ஃபேக்டரி மாடலில் ரேசிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ், சக்திவாய்ந்த என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் அப்ரிலியா RSV4 ஃபேக்டரி மாடல் டுகாட்டி நிறுவனத்தின் பனிகேல் V4 S மாடலுக்கு போட்டியாக அமைகிறது. டுகாட்டி பனிகேல் V4 S மாடலின் விலை ரூ. 2.2 லட்சம் அதிகம் ஆகும்.

     


    புதிய RSV4 ஃபேக்டரி மாடலில் 1099 சிசி, V4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 214 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் பீம் அலுமினியம் ஃபிரேம் மற்றும் அசத்தலான ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 43 மில்லிமீட்டரில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒலின்ஸ் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் எலெக்ட்ரிக் முறையில் இயக்கப்படும் மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17.9 லிட்டர்கள் ஃபியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    • வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.
    • படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

    மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதற்கடுத்து துல்கர் சல்மானுடன் சோலோ என்ற படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் தன்ஷிகா 'தி ப்ரூஃப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். நடன இயக்குனரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன் வெளியானது, படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலை ஏப்ரல் 20 ஆம் தேதி இசையமைப்பாளர் இமான் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். இப்படத்தில் அறிமுக இசையமைப்பாளரான தீபக் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது
    • வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது

    நாளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதனையொட்டி பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள், வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணைப்பின் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×