என் மலர்
இந்தியா

அமெரிக்கா- ஈரான் மோதல்: மத்திய கிழக்கு பகுதி நிகழ்வுகள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது- இந்தியா
- அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும்.
- மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அமெரிக்கா இன்று காலை இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற நாடுகள் மீது அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்றும் வரும் சமீபத்திய நிகழ்வால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பதற்றங்களை தணிக்கவும், அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.






