என் மலர்
நீங்கள் தேடியது "Airstrikes"
- இதில் 10 பேர் உதவி விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள்
- இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை சுமார் 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.
மேலும் மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெய்ர் அல்-பாலாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து கோதுமை மாவு மூட்டைகளைப் பெற வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் அரங்கேறி உள்ளது.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 132,632 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் மனிதாபிமான உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள் உத்தரவிட்டதாக வெளியான செய்தியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மறுத்துள்ளார்.
- தெஹ்ரானின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணை கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் 200 போர் விமானங்கள், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அதே போல் மாலையிலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.
இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கின. நேற்றும் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன.
இதற்கிடையே தங்களது தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலும், ஈரானும் அறிவித்தன.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்று இஸ்ரேல், ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை தொடுத்தன.
இஸ்ரேலில் இன்று அதிகாலை நடத்திய தனது புதிய தாக்குதலில் ஈரானின் ராணுவ தலைமையகம், அணுசக்தி நிலையங்கள், எண்ணை நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள், எரிவாயு நிலையங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மீது ஏவுகணை வீசப்பட்டது. அதே போல் தெஹ்ரானின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணை கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
புஷேர் மற்றும் அபாடனில் உள்ள முக்கிய எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது. இஸ்ரேல் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிலைய மான தெற்கு பார்ஸ் எரிவாயு மையம் தீப்பிடித்து எரிக்கிறது.
அதேபோல் ஹைபா, தம்ரா உள்ளிட்ட ஈரானின் பல்வேறு நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் தாக்குதல்களால் தெஹ்ரான் உள்பட நகரங்களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும் போது, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது விரிவான தொடர் தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த இலக்குகளில் அணுசக்தி திட்டத்தின் தலைமையகமான ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தெஹ்ரானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் பலியானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலின் புதிய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள், டிரோன்கள் வீசப்பட்டன.
இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கின. டெல்அவிவ், ஜெருசலேம், பேட் யாம், ரெஹோவோட் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின.
ஏவுகணை தாக்குதலில் டெல் அவிவ்வில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. டான் மாவட்டத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடம் இடிந்தது. மேலும் அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வரு கிறது. ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது. இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது
- இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில், இஸ்ரேலின் வன்முறை பாதை கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஈரான் மீது இசுரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசிப் பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது.
உலக நாடுகள் அனைத்தும் இதனைக் கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள்பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும். இனி வேண்டாம் போர்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
- தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தங்களை தாக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தாகவும் அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அந்நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அழிப்போம் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் பகுதியளவு இடிந்து விழுந்த கட்டிடங்களின் படங்கள் வெளியாகி வருகின்றன.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
இந்த சூழலில், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானிய ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கை மீண்டும் ஒரு போர் போன்ற அச்ச நிலைக்குத் தள்ளுகிறது.
இதற்கிடையில் இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயர் ஆலோசகர் அலி ஷம்கானியும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது. பகேரி தற்போது போர் அறையில் இருப்பதாகவும், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அரசு ஊடகமான ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்யக்கூடும் என்று பல நாட்களாக அமெரிக்க உளவுத்துறை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
- தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டக்கு காசாவின் ஜபாலியா நிர்வாகம் கூறியதாவது, ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள், வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்தது. தற்போது காசாவில் மீண்டும் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன. தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
- ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது.
- கத்தார் நாட்டு தூதரகத்துக்குள் ஆயுதங்களுடன் சிலர் புகுந்து சூறையாடினர்.
கார்டூம்:
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும் சவுதி அரேபியாவில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் நேற்று தலைவர் கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது. இது அந்த நகரத்தை உலுக்கியது. மேலும் கத்தார் நாட்டு தூதரகத்துக்குள் ஆயுதங்களுடன் சிலர் புகுந்து சூறையாடினர். இதற்கிடையே சூடானில் 22-ந்தேதி மாலை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ராணுவத்தின் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளது.






