என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.
- சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இதனால் திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைப்பெறும் இந்த ஸ்கெடியூலில் ரஜினிகாந்த் மற்றும் சக நடிகர்கள நடிக்கவுள்ளனர். மற்ற பான் இந்திய நடிகர்கள் யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாம் லதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
- பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது.
- 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்
- இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.
வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கப்பல்கட்டும் தளங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்த படங்களை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

அப்போது பேசிய அவர், கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த செய்தி தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ மாநாட்டின் போது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். இப்போது இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.

பிற நாடுகளிடம் இருந்து துண்டிக்கப்பட்ட போதும் இத்தனை நவீன தொழில்நுட்பங்களை வட கொரியா எங்கிருந்து பெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பலர் ரஷியாவின் திசையை நோக்கி கை காட்டுகின்றனர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
- ரசிகர்கள் குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்
- இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ திரைப்படத்தை பற்றி சில சுவாரசிய விஷயங்களை கூறியுள்ளார். அதில் " ரெட்ரோ திரைப்பட டீசரில் வரும் காட்சியை தளபதி படத்தில் வரும் யமுனை ஆற்றிலே பாடலைப் போல் இருக்கிறது என மக்கள் கூறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. சூர்யா சார் மொத்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதேப் போல் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னையில் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
- நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார்.
- யூனை- ஐ பதவிநீக்கம் செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நேற்று (சனிக்கிழமை) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை, தென் கொரிய நீதிமன்றம் யூனின் கைது நடவடிக்கையை ரத்து செய்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவரை அவரது ஆதரவாளர்கள், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்றனர்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இரவு, பாராளுமன்ற கூட்டத்திற்கு பின்னர் நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார்.
தொடர்ந்து அடுத்த நாளே அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றார். தனிச்சையாக செயல்பட்ட யூனை- ஐ பதவிநீக்கம் செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
இதன் விளைவாக அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். யூனின் ஜனாதிபதி பதவியை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதா என்பதை அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்யும்.
அரசியலமைப்பு நீதிமன்றம் யூனின் பதவி நீக்கத்தை உறுதி செய்தால், அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தேசியத் தேர்தல் நடத்தப்படும்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு தற்போது யூன் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவர் மீதான விசாரணையை தடங்கல் இன்றி தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- எட்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் மழை பெய்தது.
- பார்வையிட வந்த பாதுகாப்பு அமைச்சரை வெள்ளநீரில் இழுக்க முயன்றனர்.
அர்ஜென்டினாவில் ஒரு வருடத்திற்குத் தேவையான மழை சில மணி நேரங்களிலேயே பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட கடுமையான புயல் வெள்ளத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை, எட்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் பெய்தது. இது பஹியா பிளாங்காவில் ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை விட அதிகம் என்று மாகாண பாதுகாப்பு அமைச்சர் ஜேவியர் அலோன்சோ தெரிவித்தார்.
புயலைத் தொடர்ந்து பெய்ய பலத்த மழை காரணமாக மருத்துவமனை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுற்றுப்புறங்கள் தீவுகளாக மாறின. நகரின் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை 10 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை நேற்று (சனிக்கிழமை) 13 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

350,000 மக்கள்தொகை கொண்ட இந்த நகரம், தலைநகரான பியூனஸ் அயர்ஸிலிருந்து தென்மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ள பாதிப்பை நேற்று பார்வையிட வந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது அப்பகுதி மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
சிலர் அவரை வெள்ள நீரில் இழுக்க முயன்றனர். ஆனால் அவர் பத்திரமாக அங்கிருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
- இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார்.
- 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார்
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. டாம் லாதாம் - மிட்செல் ஜோடி தற்போது நிதானமாக விளையாடி வருகின்றனர்.
- தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.
- புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைதான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.
அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் 3-வது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பதே உண்மையான விஷயம். அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக்கூடிய ஒன்று. பீகார் மாநில மக்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.
ஆனால் அவர்கள் மீது தமிழை திணிக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ, அதேபோல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது.
யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை.
தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது.
இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது. அதனால், கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
நான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் புதுவைக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டது.
அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தோம். தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்துதான் வருகிறது.
கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாடலான "ஆத்தி அடி ஆத்தி" பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்பாடலை விவேக் வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சாதிகா இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்பாடல் யூடியூபில் 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போலீசார், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- நீர்வீழ்ச்சியின் அருகே மூன்று பேரின் உடல்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், மல்ஹார் அருகே கடந்த மார்ச் 5ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனார்கள்.
வருண் சிங் (வயது 15), அவரது மாமா யோகேஷ் சிங் (வயது 32), தாய் மாமா தர்ஷன் சிங் (வயது 40) ஆகிய மூவரும் அவர்களின் இல்லத் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் காணாமல் போயினர். அன்றைய இரவு 8.30 மணியளவில் தர்ஷன் தனது வீட்டிற்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்து, வழி தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டிரோன் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் கதுவாவின் பில்லாவர் தாலுகாவின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மூன்று பேரின் உடல்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்றாலும் அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் மூன்று பேரும் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இன்று இதுகுறித்து பேசிய அவர், இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த அமைதியான பகுதியில் சூழலைக் கெடுப்பதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருப்பதாகத் தெரிகிறது.
இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரே ஜம்முவுக்குச் நேரடியாக செல்கிறார் என்று கூறினார். ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இருந்து பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.






