என் மலர்
நீங்கள் தேடியது "Governor CP Radhakrishnan"
- மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறை சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் குப்பை கழிவுகளால் பரவும் நோய் களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் யானைக்கால் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வேலைசெய்ய வரும் பணியாளர்களுக்கு கால முறையில் யானைக்கால நோய் பாதிப்பு மற்றும் தொற்று நோய் அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் நடத்த எற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
மருத்துவர்களும் வல்லுநர்களும் சுழற்சி முறையில் கிராமப்புறங்களுக்கு சென்று கிராமப்புற மக்களின் சுகாதாரமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்க ளுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க கோரிமேடு நோய் ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.
மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல்பருமன், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களை மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.
புதுச்சேரியில் யானைக் கால் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறைசாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
- என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.
இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.
முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.
வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.
இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.
அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.
அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.
இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.
- புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைதான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.
அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் 3-வது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பதே உண்மையான விஷயம். அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக்கூடிய ஒன்று. பீகார் மாநில மக்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.
ஆனால் அவர்கள் மீது தமிழை திணிக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ, அதேபோல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது.
யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை.
தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது.
இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது. அதனால், கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
நான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் புதுவைக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டது.
அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தோம். தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்துதான் வருகிறது.
கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






