என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: 40 ஓவர் முடிவில் நியூசிலாந்து 172/5
    X

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: 40 ஓவர் முடிவில் நியூசிலாந்து 172/5

    • டாம் லதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
    • பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.

    இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

    இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.

    40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது.

    Next Story
    ×