என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
    • அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.

    சாட்னர் பந்துவீச்சில் 31 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டி இழப்பிற்கு இந்திய அணி 115 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 70 ரன்னிலும் ஷ்ரேயஸ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

    • மதுரையில் அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், அரங்கத்தின் அருகில் இருந்த பணியாளர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதுகுறத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • சாஹல் அவரது மனைவி தனுஸ்ரீ வரமாவை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவியது

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில், துபாய் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ஆர்ஜே மஹ்வாஷ் உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கண்டு ரசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சாஹலுக்கும் அவரது மனைவி தனுஸ்ரீ வரமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் பரவியது

    இந்நிலையில், ஆர்ஜே மஹ்வாஷ் உடன் சாஹல் இருக்கும் புகைப்படம் இனியாயத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

    • தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி 11 நாட்களாக நடைபெற்று வருகிறது.
    • மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு.

    ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் இன்று கொங்கு நாட்டு வீரவிளையாட்டான 'ரேக்ளா பந்தயம்' கோலாகலமாக நடைபெற்றது.

    ஆலாந்துறை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

    ஆதியோகி முன்பு தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி 11 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இத்திருவிழாவின் ஒரு பகுதியாக 'ரேக்ளா பந்தயம்' இன்று ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் ரேக்ளா பந்தய மாட்டு வண்டிகள் மற்றும் காளைகளுடன் பங்கேற்றனர்.

    ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் பிரிவு மற்றும் 300 மீட்டர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 1,00,000 வழங்கப்பட்டது.

    அதே போன்று இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு 50,000, மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 20,000, நான்காம் பரிசு பெற்றவர்களுக்கு 14,000 வழங்கப்பட்டன.

    மேலும் 5 முதல் 15 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 3,000, 16 முதல் 30 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 2,000 ரொக்க பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.மேலும் பந்தயத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

    இதனுடன் ஆதியோகி முன்பு கடந்த 7-ம் தேதி முதல் நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடைபெற்று வருகிறது.

    இதில் காங்கேயம், புங்கனூர், தார்பார்க்கர், கீர், சாஹிவால், பர்கூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட நாட்டின ரக மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் ரேக்ளா பந்தயத்திற்கான ஜோடி காளைகள், ஜல்லிக்கட்டு இளந்தாரி காளைகள், ஊட்டச்சத்து மிக்க பால் தரும் நாட்டின ரக பசுக்கள் ஆகியன அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே போன்று குதிரைகளில் மார்வாரி மற்றும் நாட்டுக் குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

    கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நாட்டு மாட்டுகள் மற்றும் குதிரைகளின் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு 3 நாட்களுக்கும் தேவையான தீவனங்கள், தண்ணீர் மற்றும் வெயில் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலான அரங்குகள் உள்ளிட்டவை ஈஷா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மேலும், சந்தைக்கு வரும் மக்களுக்கும் தேவையான தங்குமிடம் மற்றும் உணவு ஈஷா சார்பில் வழங்கப்பட்டது. இந்த சந்தை இன்றோடு நிறைவு பெறுகிறது.

    தமிழ்த் தெம்பு திருவிழாவில் தமிழ்நாட்டை சார்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி, தமிழ் பண்பாட்டு கலைகளின் பயிற்சி பட்டறைகள், தினமும் மாலை வேளைகளில் தமிழ் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுக் கடைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரளாக பங்கேற்றனர்.

    இந்த ஆண்டு தமிழ்த் தெம்பு திருவிழா கடந்த பிப் 27 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை 11 நாட்கள் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பொது மக்களிடம் இருந்த கிடைத்த சிறப்பான வரவேற்பினை முன்னிட்டு விழாவினை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • டார்க் படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
    • படத்தின் முதல் பாடலான ஒரு ஸ்டெப் வச்சா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளனர்.

    இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஒரு ஸ்டெப் வச்சா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அஞ்சனா முருகன்.

    இப்பாடலை தமன் இசையில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அத்விதீயா வொஜலா இணைந்து பாடியுள்ளனர். பாடல் மிகவும் துள்ளலாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் தொழில்நுட்ப குழு பின் வருமாறு

    ஒளிப்பதிவு - ரவி சக்தி

    படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன்

    இசை - மனு ரமேசன்

    கலை - ஷன்முகராஜா

    ஆடை வடிவமைப்பு - காயத்ரி

    ஸ்டண்ட் - நைஃப் நரேன்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 10 ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது.

    இப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றவுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • காசாவை விலைக்கு வாங்கி மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அந்நகரத்தை சுற்றுலா தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.
    • கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சிலர், `காசா விற்பனைக்கு அல்ல’ என்று பெயின்டால் புல்தரையில் எழுதியுள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் மீதான சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த 13 மாதகாலமாக நடத்திய தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர். மேலும் பணையக்கைதிகள் பரிமாற்றம் பல கட்டங்களாக நடைபெற்றது.

    இதற்கிடைய காசாவை விலைக்கு வாங்கி மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அந்நகரத்தை மேற்கு நாடுகளுக்கான சுற்றுலா தளமாக மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் கங்கணம் கட்டியுள்ளார். தனது தொலைநோக்கு பார்வை குறித்த ஏஐ வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

    இந்நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சிலர், `காசா விற்பனைக்கு அல்ல' என்று பெயின்டால் புல்தரையில் பிரம்மாண்டமாக எழுதியுள்ளனர்.

     

    அதுமட்டுமின்றி, மைதானம் முழுதும் குழுக்கள் தோண்டியும், வீடு மற்றும் சுவர்களில் கிறுக்கியும் சேதப்படுத்திய அந்த பாலஸ்தீனிய குழுவினர், `காசாவைக் கைப்பற்ற நினைத்தால், டிரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி"
    • புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது

    ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸிக்" என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது.

    புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.

    காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது. அவன் ஒரு உற்சாகமான இளம் பெண்ணைச் சந்திக்கையில், அவன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு முழுமையான என்டர்டெயினராக அனைத்து அம்சங்களுடன் கூடிய காமெடிப் படமாக, இப்படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.

    தயாரிப்பாளர் விதி ஆச்சார்யா கூறியதாவது.., "பிண்டு கி பப்பி" படத்தை உருவாக்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரை ஒன்றிணைத்து உருவான திரைப்படம், மேலும் நாங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை திரையில் பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்றார்.

    இத்திரைப்படத்தில் சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ். சோனி, ஊர்வசி சௌஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    விதி ஆச்சார்யா (V2S Production) தயாரிப்பில், ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், மார்ச் 21, 2025 அன்று பிரமாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.

    இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

    இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் - பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    பிரேஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 51 ரன்கள் அடித்தார்.

    • தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது.
    • அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில், 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    அப்போது அவர், "திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபுவை இ.பி.எஸ் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.
    • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை

    ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தவரை உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து ஆதரித்தார்.

    ஆனால் டொனால்டு டிரம்ப் ரஷியா பக்கம் சாய்த்துள்ளார். சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.

    இந்நிலையில் ஜெலென்ஸ்கிக்கு டொனால்டு டிரம்ப்பின் கூட்டாளி எலான் மஸ்க் பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது ஸ்டார்லிங்க் அமைப்பு உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பு. நான் அதை நிறுத்தினால், அவர்களின் முழு பாதுகாப்பு அமைப்பும் சரிந்துவிடும்.

    மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களால் நான் சோர்வடைந்துள்ளேன். உக்ரைன் இந்தப் போரில் தோற்பது உறுதி. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை.

    தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஜெலென்ஸ்கி வேண்டுமென்றே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.
    • சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

    சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இதனால் திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைப்பெறும் இந்த ஸ்கெடியூலில் ரஜினிகாந்த் மற்றும் சக நடிகர்கள நடிக்கவுள்ளனர். மற்ற பான் இந்திய நடிகர்கள் யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×