என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.
    • இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    புதுடெல்லி:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடபாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு அசாதாரணமான ஆட்டம் மற்றும் ஒரு அசாதாரணமான முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காக எங்கள் கிரிக்கெட் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம். அவர்கள் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமான ஒட்டுமொத்த அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்தள்ளது
    • ரீரிலீஸ் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    2004 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின் ,நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது எம்.குமரன் Son Of Mahalakshmi திரைப்படம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது. கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்-க்காக மகன் எய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும். குறிப்பாக ரவி மோகன் மற்றும் நதியாவின் காம்பினேஷன் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும்.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் வரும் மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். இந்நிலையில் படத்தின் ரீரிலீஸ் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    இதனால் ரவி மோகன் ரசிகர்கள் மற்றும் திரைப்படத்தை திரையரங்கிள் பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அவுட்டானார்
    • பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஷ்ரேயஸ் - அக்சர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் அக்சர் அவுட்டானார்.

    இறுதியில் கே.எல்.ராகுல் - ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் 49 ஓவர் முடிவில் 254 ரன்கள் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா வசதியுள்ளது.

    • ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • ஷ்ரேயஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் அக்சர் அவுட்டானார். 

    42 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் அடித்துள்ளது.

    • இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

    இப்படம் 4 கதைகளை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. 4 கதைகளும் அம்மா என்ற உறவின் மேன்மையை உணர்த்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
    • உடல்நலம் தேறியதை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்ச்ர் கருணாநிதி அவர்களின் மனைவியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.

    மேலும், அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் துணை தலைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தன்கருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தெரிவித்துள்ளார்.

    இதைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீப் தன்கரின் உடல் நலம் குறித்து அறிய இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார்.

    மருத்துவமனையில் ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிடுள்ளது.

    திரைப்படத்தை கப்பல் செட் போட்டும், சில காட்சிகளை கடலில் எடுத்துள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகளை குறைக்க தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு மேக்கப்களை போட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
    • அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 2,500 ரன்களை நிறைவு செய்து ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார்.

    • நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக விளையாடி ரோகித் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டி இழப்பிற்கு இந்திய அணி 136 ரன்கள் அடித்துள்ளது. ஷ்ரேயஸ் 19 ரன்னிலும் அக்சர் 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
    • அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.

    சாட்னர் பந்துவீச்சில் 31 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டி இழப்பிற்கு இந்திய அணி 115 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 70 ரன்னிலும் ஷ்ரேயஸ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

    • மதுரையில் அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், அரங்கத்தின் அருகில் இருந்த பணியாளர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதுகுறத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×