குடியரசுத் துணை தலைவர் விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்- பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் துணை தலைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
குடியரசுத் துணை தலைவர் விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்- பிரதமர் மோடி
Published on

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தன்கருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீப் தன்கரின் உடல் நலம் குறித்து அறிய இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார்.

மருத்துவமனையில் ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com